நமீதாவின் இரட்டை குழந்தைகள் பெயர் சூட்டு விழா – கடவுளின் பெயரை வைத்துள்ள நமிதா. என்ன பெயர்கள் பாருங்க.

0
490
namitha
- Advertisement -

நமிதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தான் நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனெக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

நமீதா திருமணம்:

இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள்:

திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக நமீதா போராடி இருந்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் பா ஜ க கட்சியில் சேர்ந்தார். பின் இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்ததை சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். அதிலும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார் நமீதா. நமீதாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதே போல அடிக்கடி Pregnancy போட்டோ ஷூட்களையும் பதிவிட்டு வந்தார்.

-விளம்பரம்-

நமீதா குழந்தையின் பெயர் சூட்டும் விழா:

மேலும், இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதற்கு பலருமே நமீதாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து நமீதா தன்னுடைய குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி இருப்பதை குறித்து நமீதா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். நமீதாவின் சொந்த ஊரான சூரத் நகரில் தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்து இருக்கிறது. இந்த விழாவில் நமீதா- வீரேந்திர சௌத்ரி ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கின்றனர்.

நமீதா பதிவு:

மேலும், குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் பெயர்கள் வைத்துள்ளனர். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமீதா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ‘கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ‘கியான் ராஜ்’ ! இரண்டும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பரிசு. அதனால், என் குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் பெயரை வைக்க முடிவு செய்தேன். இந்த பெயரிடும் விழா எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் சிறப்பாக நடந்தது. உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement