இந்த திருமணம் குறித்து நமீதா முன்னரே கூறி இருக்கிறார்
வீர் எனக்கு தெரிந்த நண்பருடைய நண்பர் தான். கடந்த ஒரு வருடமாக தான் அவரை தெரியும். ஆனால் தற்போது அவருடன் திருமணம் செய்துகொண்டு நிற்கிறேன். எல்லாம் கனவில் நடந்தது போல இருக்கிறது.
செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வீர் என்னிடம் கடற்கரை ஓரம் வைத்து திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்டார்.
என்னால் பதில் சொல்லவே முடியவில்லை எனக்கு அழுகை வந்துவிட்டது. அன்று தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து மண உழைச்சலோடு வந்திருந்தேன். அப்போது எனக்கு ப்ரொபோஸ் செய்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டார், என நெகிழ்ச்சியாக கூறினார் நமீதா




