பிக் பாசில் 91 நாட்கள் சிறப்பாக விளையாடிய நிக்சன் பெற்ற மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
186
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 91 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-
nixen

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் அன்னயா, வெளியேறி இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமற்ற நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் சண்டைக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

குறிப்பாக, இவர் வினுஷாவை உருவ கேலி செய்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருந்தது. இது குறித்து கமலும் கண்டித்திருந்தார். அதற்கு பின் நிக்சன் bully கேங்க்குடன் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் எல்லாம் அளவே இல்லை. அர்ச்சனா, விசித்திரா இருவரையும் நிக்சன் மோசமாக தாக்கி பேசி இருந்தார். இதனாலே இவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதோடு இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது.

Nixen

நிக்சன் – ஐசு காதல்:

இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. சொல்லப்போனால் ஐசுவின் செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு அவரின் பெற்றோர்கள் சேனல் இடம் அழுத்தம் கொடுத்தாகவும், அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள்.

-விளம்பரம்-

நிக்சன் செய்த லீலைகள்:

பின் நிக்சன் தன்னுடைய தம்பி மாதிரி என்று பூர்ணிமா சொல்லி கொண்டு இருந்தார். ஆனால், இவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும் போது அக்கா – தம்பி போல தெரியவில்லை. இவர்கள் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டு இருந்தார்கள். பின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அர்ச்சனா- நிக்சன் இருவரும் சண்டை போட்டு இருக்கிறார்கள். அப்போது கோபத்தில் நிக்சன், சொருகி விடுவேன் என்று அர்ச்சனாவை மோசமாக பேசியிருந்தார்.

நிக்சன் சம்பளம்:

இதற்கு கமலும் திட்டி இருந்தார். பின் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று இருக்கிறார். இதை கமல் கண்டுபிடித்து வார்னிங் செய்திருந்தார். மேலும், நிக்சன் கடைசி வரை செல்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், யாரும் எதிர் பார்க்காத விதமாக நேற்று நடந்த டபுள் எவிக்சனில் நிக்ஸன் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் நிக்சன் ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் என்ற கணக்கில் 90 எபிசோட்களுக்கு ரூ. 11, 70,000 சம்பளமாக நிக்சன் வாங்கியுள்ளார் என தெரிகிறது.

Advertisement