‘நான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்’ ஷாக் கொடுத்த பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர். இவரா அப்படி சொன்னது.

0
969
BiggBoss
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், ஆரம்பத்திலேயே இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-200.jpg

அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். 20 பேர் கலந்து கொண்ட இந்த சீசனில் ராஜு, நிரூப், பிரியங்கா, பாவனி, அமீர் ஆகிய 5 பேர் இறுதி போட்டி வரை தகுதி பெற்றனர். இதில் நிரூப் இரண்டாம் நேரடி இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

மக்களுக்கு புதிய நிரூப் :

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பலர் கலந்துகொண்டனர் அதில் நிரூப்பும் ஒருவர். நிரூப் நந்தகுமார் தொழிலதிபர் ஆவார். பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பின் சென்னையிலும் க்ளவுட் கிச்சன் நடத்தி வருகிறார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதனால் பல ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். ஆனால், நேரில் செல்லும் போது இவருடைய உயரத்தை பார்த்துவிட்டு உயரமாக இருப்பதால் நடிக்க வைக்க முடியாது என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்கள்.

வீடியோவில் 9 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

யாஷிகா – நிரூப் காதல் :

பின் சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அதோடு யாஷிகா மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து என்றே சொல்லலாம். அதோடு நிரூப் நந்தகுமார் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது யாஷிகா உடல்நலம் தேறி வந்த நிலையில் முதன் முதலாக நிரூபைத் தான் சந்திக்க வந்திருந்தார். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பே நெருங்கிய நண்பர்கள். யாஷிகா- நிரூப் இருவரும் காதலித்து வந்ததாக சோசியல் மீடியாவில் சர்ச்சையானது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

நிரூப் சொன்ன ஷாக்கிங் காரணம் :

யாஷிகாவை பிரிந்த காரணம் குறித்து சொன்ன நிரூபி, நானும் யாஷிகாவும் காதலித்தது உண்மை தான். நாங்கள் பிரிந்ததற்கு காரணம் என்று பார்த்தால் செட்டாகவில்லை சரி என்று பிரிந்து விட்டோம். வேறு ஒன்றும் காரணமில்லை. ரெண்டு பேரும் பேசி தான் பிரிந்தோம். பிரிந்தும் நாங்கள் ரெண்டு பெரும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிரூப் தான் திருமணம் செய்துகொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

வீடியோவில் 4 : 22 நிமிடத்தில் பார்க்கவும்

குழந்தையை தத்தெடுத்தக்கொள்வேன் :

இதுகுறித்து தெரிவித்த அவர் ‘இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை அதே போல நான் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வேன். வெளியில் எத்தனையோ குழந்தைகள் அம்மா இல்லாமல் அப்பா இல்லாமல் இருக்கிறது. நாம் எந்த அன்பு இல்லாமல் ஏங்கி கொண்டு இருக்கிறோமோ அந்த அன்பு இல்லாமல் தான் ஏங்கி கொண்டு இருக்கிறோமோ அதே ஏக்கத்தில் தான் அந்த குழந்தைகளும் இருக்கிறார்கள், ஆனால், எனக்கு வரப் போகும் மனைவி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement