யாஷிகாவுடன் பிரேக் அப் ஆனது ஏன் – பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக நிரூப் அளித்த பேட்டி.

0
752
niroop
- Advertisement -

தமிழில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. போட்டிகள், சவால்கள் என பல மாற்றங்களுடன் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டிருந்தது. இதில் முகம் தெரிந்த நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள். அந்த வகையில் முகம் தெரியாத நபராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி இருந்தவர் நிரூப் நந்தகுமார். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் இவரைப்பற்றிய பேச்சுதான் அதிகம் போயிருந்தது இவருடைய இவர் பிக்பாஸ் பிக்பாஸில் இறுதி போட்டியாளராக நிரூப் நந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

நிரூப்- யாஷிகா உறவு:

மேலும் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தை ராஜி தட்டிச் சென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இப்படி ஒரு நிலையில் நிரூப் நந்தகுமாருக்கும், யாஷிகாவும் இடையேயான உறவு பற்றி தான் பார்க்க போகிறோம். நிரூப் நந்தகுமார் தொழிலதிபர் ஆவார். பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பின் சென்னையிலும் க்ளவுட் கிச்சன் நடத்தி வருகிறார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதனால் பல ஆடிசனுக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

நிரூப் பிக் பாஸ் வாய்ப்பு:

ஆனால், நேரில் செல்லும் போது இவருடைய உயரத்தை பார்த்துவிட்டு உயரமாக இருப்பதால் நடிக்க வைக்க முடியாது என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். பின் சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அதோடு யாஷிகா மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து என்றே சொல்லலாம். அதோடு நிரூப் நந்தகுமார் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது யாஷிகா உடல்நலம் தேறி வந்த நிலையில் முதன் முதலாக நிரூபைத் தான் சந்திக்க வந்திருந்தார்.

யாஷிகா- நிரூப் செய்த ரகளை வீடியோ:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் யாஷிகா கலந்து கொண்டிருந்தார். மேலும், இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பே நெருங்கிய நண்பர்கள். யாஷிகா- நிரூப் இருவரும் காதலித்து வந்ததாக சோசியல் மீடியாவில் சர்ச்சையானது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், யாஷிகா இல்லை என்று சொல்லி இருந்தார். பின் ஒருமுறை லைவ் வீடியோவில் யாஷிகா, ஐஸ்வர்யா பேசிக்கொண்டிருக்கும்போது நிரூப் வந்து ஒரு ரகளை செய்து இருந்தார்.

-விளம்பரம்-

சர்ச்சையான வீடியோ:

அப்போது நிரூப், யாஷிகாவிற்கு உதட்டில் லிப் கிஸ் கொடுத்திருந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலானதோடு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல் யாஷிகா நிரூப் இருவரையும் தாறுமாறாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு யாஷிகா-நிரூப் பிரிந்து விட்டார்கள். அவர்கள் இருவருக்குமிடையே பிரேக் அப் ஆகி விட்டது என்றெல்லாம் செய்தி வந்தது. மேலும், இதுகுறித்து கூட நிரூப் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள ஒருவர் நிச்சயம் வேண்டும். ஆனால், relationshipகள் எனக்கு எப்போதும் செட் ஆகவில்லை. நான் ஒரு தனி உலகத்தில் இருப்பேன். relationship எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எனக்கு அமையவில்லை.

வீடியோவில் 4 : 22 நிமிடத்தில் பார்க்கவும்

நிரூப் அளித்த பேட்டி:

எனக்கு தகுந்த ஒருவரை நான் இதுவரை பார்க்காமல் இருந்திருக்கலாம். நான் தேடி இருக்கிறேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லி இருந்தார். இந்நிலையில் நிரூப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் யாஷிகா குறித்தும் தன்னுடைய பிரேக்கப் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கூறியிருப்பது, நானும் யாஷிகாவும் காதலித்தது உண்மை தான். நாங்கள் 2 பேருமே சேர்ந்து முடிவெடுத்து தான் பிரிந்து விட்டோம். எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் யாஷிகா தான். அவளுடைய பிரபலத்தினால் தான் எனக்கு கிடைத்தது. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதே போல் நாங்கள் பிரிந்ததற்கு காரணம் என்று பார்த்தால் செட்டாகவில்லை சரி என்று பிரிந்து விட்டோம். வேறு ஒன்றும் காரணமில்லை. ரெண்டு பேரும் பேசி தான் பிரிந்தோம். பிரிந்தும் நாங்கள் ரெண்டு பெரும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். அதற்காக லவ் பண்ணி பிரிந்து விட்டோம் என்று வெறுப்போ, முகத்தை திருப்பிக் கொண்டு செல்வது என்று அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. நாங்க நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக்பாஸ்க்கு பிறகும் வெளியே வந்து கூட அவளிடம் நான் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement