எனக்கும் அபிராமிக்கு இடையில் அவள் இப்படி நாரதர் வேலையை பார்த்துவிட்டாள் – புலம்பிய நிரூப்.

0
652
Niroop
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிரூப். இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று தான் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள். அதில் மக்களுக்கு பரிச்சயமில்லாத நபராக அறிமுகமாகி வெளியில் வரும் போது தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார் நிரூப். ஆரம்பத்தில் வீட்டில் நிரூப் டானாக தெரிந்தாலும் பின் போகப் போக பல சர்ச்சையில் சிக்கி இறந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இறுதிவரை போராடி இருந்தார் நிரூப். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது நிரூப்பும், அபிராமியும் காதலித்தார்கள் என்பதே பலருக்கும் தெரிந்தது. பின் அவர்கள் இருவரும் காதல் பிரேக் அப் ஆனது குறித்து கூறி இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் யாஷிகா உடனான காதல் குறித்தும் நிரூப் கூறியிருந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் திறமையாக விளையாடி இருந்தார்.

- Advertisement -

நிரூப் அளித்த பேட்டி:

இருந்தாலும் ஜூலி, அபிராமி, அனிதா போன்று பல போட்டியாளர்கள் உடன் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். பின் இறுதி வரை போராடி சென்று இருந்தார். மேலும், அல்டிமேட் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பல போட்டியாளர்கள் நிகழ்ச்சிகள், பேட்டி என்று அனைத்திலும் பங்கு பெற்று இருந்தார்கள். ஆனால், நிரூப் பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றிற்கு நிரூப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருந்தது,

நிகழ்ச்சிக்கு பின் நடந்தது:

அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்தும் நான் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் என் அம்மாவின் உடல்நிலை சரியில்லை. அதனால் நான் யாருடனும் பேசவில்லை. இப்போது அம்மாவுக்கு ஓகே. அதோடு பிக்பாஸ் முடிந்த பிறகு அல்டிமேட் போனதற்கு காரணம் நிகழ்ச்சி பிடித்திருந்தது. எல்லாரும் பற்றியும் அறியலாம் என்று நினைத்து தான் போனேன். பிக் பாஸ் சீசன் 5ல் அமீர் எனக்கு தடை என்று கூறியிருந்தார்கள். அல்டிமேட்டில் எனக்கு தடையாக அப்படி எதுவும் இல்லை. எனக்கு நான் தான் தடையாக இருந்தேன்.

-விளம்பரம்-

ஜூலி -அனிதா விவகாரம்:

மற்றபடி எதுவும் இல்லை. அதோடு ஜூலி கூட கெட்ட வார்த்தை வேண்டும் என்று பேசவில்லை. அதை கதைக்கும் போது அப்படி வந்தது தான். அதற்குப்பிறகு அவகிட்ட நான் மன்னிப்பெல்லாம் கேட்டேன். அதேபோல அனிதாவால் நான் கேம் சரியாக விளையாடாமல் எல்லாம் இல்லை. அவருக்கு அப்படி ஒரு ஐடியாவும் இல்லை. எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஒன்று இருக்கு. யாஷிகா கிட்ட நிறைய லவ் இருக்கு என்று பார்க்கும் போது தெரிந்தது. ஆனால், பிரேக் அப் ஆனது. அதற்கு அவ்வளவு பெரிய காரணம் எல்லாம் இல்லை. சின்ன விஷயத்துக்காக சண்டை போட்டு பேசாமல் இருக்கோம்.

அபிராமி கிஸ் பண்ண காரணம்:

கமல் சார் நிகழ்ச்சியை வித்தியாசமாக தொகுத்து வழங்குவார். அதேபோல் சிம்புவும் கொஞ்சம் என்டர்டைன்மென்ட் ஆக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். அபிராமி கிஸ் பண்ணது குறித்து பலரும் கேட்டு இருந்தார்கள். அது ஒரு கேமில் தாமரை பார்த்த நாரதன் வேலை. நானாக எதுவும் செய்யவில்லை. தாமரை ஒரு டீம், நாங்க ஒரு டீம். அவங்க சொல்றதை நான் கேக்கணும். அப்படி இருக்கும்போது அபிராமியை தாமரை என்னோட கன்னத்தில் கிஸ் பண்ண சொல்லிட்டாங்க. அவளும் வந்து கிஸ் பண்ணாள் மற்றபடி எதுவும் இல்லை என்று பிக் பாஸ் மற்றும் அல்ட்டிமேட் நிகழ்ச்சியின் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement