பாலாஜியை பழிவாங்கும் மனைவி நித்யா..! கோபத்தில் கொச்சை வார்த்தையால் திட்டிய பாலாஜி

0
725
Nithya-And-Balaji

பிக் பாஸ் வீட்டினுல் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் இடையே பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே மோதல் இருந்து கொண்டே வருகிறது. இவர்கள் இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னைகளை மனதில் கொண்டு இருவரும் சண்டையிட்டு வருகின்றனர்.

balaji big boss

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் உள்ள சண்டையில் என்னை ஊற்றும் வகையில் பிக் பாஸ், டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ணாக இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது.

இந்நிலையில் இன்று (ஜூன் 28) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் எஜமானிகளாகவும், ஆண்கள் பணியாட்களாகவும் மாற்றப்பட்டனர். இதில் நித்யாவின் பணியாளராக இருந்த பாலாஜியை, நித்யா கொஞ்சம் ஓவராக வேலை வாங்கி கொண்டு வந்தார். அவரை துணி தோய்த்து வரும்படியும், துணியை இஸ்திரி போடச்சொல்லியும், காபி போட்டு எடுத்துவரும்படியும் அலைக்கழிக்க விட்டார் நித்யா.

-விளம்பரம்-

nithya bigg boss

நித்யா கூறியதை பல்லை கடித்துக் கொண்டு செய்து கொண்டிருந்த பாலாஜி ஒரு கட்டத்தில் அவரை கொச்சை வார்த்தை பயன்படுத்தி திட்டிவிட்டார். இது வெறும் டாஸ்க் என்பதை மறந்த பாலாஜி மற்ற போட்டியாளர்கள் சொல்லும் வேலைகளை மட்டும் எந்த ஒரு எதிர்ப்பும் செய்யாமல் செய்தார். இதனால் பாலாஜியின் மனைவி நித்யா தன்னை மட்டும் பாலாஜி கேட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டிவருகிறார் என்று கூறி வருகிறார்.

Advertisement