பிக்பாஸ் வீட்டில் ‘Eliminate’ ஆகும் நபர் இவர் தான்.! அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்

0
1276
Bigg-Boss
- Advertisement -

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருந்தது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர். இதில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

nithya bigg boss

பிக் பாஸ் வீட்டில் இருந்து மமதி மற்றும் அனந்த் வைத்யநாதனை தொடர்ந்து எலிமினேட் ஆக போகும் அந்த போட்டியாளரை இன்று (ஜூலை 15) ஞாயிற்று கிழமை கமல் அறிவிப்பார். நாமினேஷனில் உள்ள போட்டியாளரை காப்பற்ற மக்கள் வாக்களித்து வந்த நிலையில் , இந்த வாரம் நித்யா குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.

- Advertisement -

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் தருவாயில் யாஷிகா ஆனந்த் தான் இருந்து வந்தார். இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது, இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா ஆனந்த் செய்த ஒரு சில அநாகரீக செயல்களால் மக்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது தான். இதனால் இந்த வாரம் யாஷிகா ஆனந்த் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கபட்டது.

Nithya

இந்நிலையில் இந்த வாரம் நடந்த வாக்களிப்பில் யாஷிகா மற்றும் நித்யாவிற்கு தான் கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.இதில் இறுதியில் யாஷிகா ஆனந்த் , நித்யாவை விட அதிகப்படியான வாக்ககுகள் பெற்று இந்த வாரம் காப்பற்றபட்டுள்ள்ளார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நித்யா வெளியேறி உள்ளதாக நம்பிக்கைகுரிய வட்டாரக்ங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement