முதல் மனைவி, மகனுக்கு பாலாஜி செய்த துரோகம்.! நித்யா திடுக்கிடும் தகவல்.!

0
1348
Balaji
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்குபெற்ற பாலாஜிக்கு, நித்யாவிற்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், சமீப காலமாக நித்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்து வருகிறார் பாலாஜி. கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்த பாலாஜி கமலிடம் பேசுகையில், நான் வெற்றிபெறுவேனா இல்லையா என்பது எனக்கு முக்கியம் இல்லை வெளியே சென்றதும் என் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.அது தான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

bigg-Boss-balaji

- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் வீட்டில் நித்யா அனுப்பிய கடிதத்தை பார்த்து பாலாஜி மிகவும் கண்கலங்கி விட்டார். ஏனெனில் அந்த கடிதத்தில் ‘நான் உங்களுடன் கடைசி வரை ஒரு தோழியாக, தோழியாக மட்டும் இருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலாஜியுடன், நித்யா மீண்டும் மனைவியாக வாழ விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது.

பாலாஜி தற்போது திருந்தி மனைவியுடன் வாழ நினைக்கிறார் ஆனால், நித்யா அடம்பிடித்து வருகிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில் சமீபத்தில் பாலாஜியுடன் சேர மறுப்பதற்கான ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அது என்னவெனில், பாலாஜிக்கு ஏற்கனவே முதல் மனைவி ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அதுவும் பாலாஜிக்கு பிறந்த மகன் தான்.

-விளம்பரம்-

bigg-boss-tamil nithya

ஆனால் பாலாஜி பிக் பாஸ் வீட்டில் என்னையும் எனது மகள் போஷிகாவை மட்டும் மிஸ் செய்து வருவதாக அடிக்கடி எங்கள் பெயரை மட்டும் கூறி அனுதாபத்தை பெற்று வருகிறார்.ஒரு முறையாவது தன் மகன் பெயரை சொல்லவேண்டியதுதானே, அந்த பிள்ளைக்கும் அந்த ஆசை இருக்காதா..? ஏன் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன், அவரது பிள்ளை இல்லையா? அவருடைய முதல் மனைவி மற்றும் மகனுக்கும் ஆசைகள் இருக்காதா. இதுவரை அவரது முதல் மகன் பற்றி ஏன் பேசவில்லை என்று நித்யா கூறியுள்ளார்.

Advertisement