தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தான் நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் கமலஹாசன் முன்னிலையில் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் வருகிறார்.
ஏற்கனவே நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் அந்த வேலையிலிருந்து விலகி விட்டார். கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார் நித்யா.
இவர்களுடைய குடும்ப பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆனால், பாலாஜி தன்னுடைய மகளுக்காகவது ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். அதையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். பள்ளி திறப்பது கொஞ்சம் கஷ்டம் என்பதால் நித்தியா பழையபடி வேலைக்கு போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ஆவது பாலாஜி உதவுவாரா? இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் தன் மகளை வளர்த்து வருகிறார் நித்யா.