தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். யூடுயூப் மூலம் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், பிக் பாஸில் சென்ற நாள் முதலே இவருக்கு ஹேட்டர்களும் உருவானது. அதிலும் இவர் மாயாவுடன் சேர்ந்து செய்த பல செயல்கள் இவர் மீது ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பை கூடியது. அதை இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக இவர் நிக்சனுடன் சேர்ந்து செய்யும் செயகள் பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு காதல் கதை நிச்சயம் இடம்பெற்றுவிடும். அந்த வகையில் இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது. ஆனால், இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது.
இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. சொல்லப்போனால் ஐசுவின்செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு சேனல் தரப்பில் அழுத்தம் கொடுத்தாகவும் அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள்.
ஆனால், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் நிக்சனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். அதிலும் நிக்சன் தன்னுடைய தம்பி மாதிரி என்றும் இருவரும் அக்கா – தம்பி பாசத்தை பொலிந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும் போது அக்கா – தம்பி போல தெரியவில்லை என்பதே பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களின் கருத்து. அதற்கு காரணம் இவர்கள் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டு வருகின்றனர்.
அடிக்கடி பூர்ணிமாவை வர்ணிப்பது, அவரை கட்டிபிடிப்பித்து, மடியில் அமர்ந்து படுத்துக்கொள்வது, உங்களை யாரும் லவ் பண்ணவில்லையா நீங்கள் ஆடும் போது அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணிப்பது என்று நிக்சன் மீண்டும் தனது காஜி தனத்தை காட்டி வருகிறார். பூர்ணிமா, விஷ்ணுவை வெறுப்பேற்ற நிக்சனுடன் வெண்ணிலவே பாடலுக்கு ஒட்டி உரசி டான்ஸ் ஆடியது பலரை முகம் சுழிக்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் பூர்ணிமா, நிக்சனிடம் ‘வாயா என் வீர ‘ பாடலுக்கு டான்ஸ் ஆட வேண்டும் பேசி இருக்கிறார்.