அனுமதி இல்லாமல் சாப்பிட்ட போட்டியாளர்..! நேரடியாக ‘Nominate’ செய்த பிக்பாஸ்.!

0
767
Bigg-Boss
- Advertisement -

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், வைஷ்னவியை எலிமினேட் செய்வதாக அறிவித்துவிட்டு பின்னர் அவரை ரகசிய அறைக்கு அனுப்பி வைத்துவிட்டார் கமல்.

-விளம்பரம்-

bigg-boss-kamal

- Advertisement -

இந்நிலையில் இன்று (ஜூலை 30) இந்த வாரத்திற்காக நாமினேஷன் ப்ராசஸ் (nomination process) தூவுங்க இருக்கிறது. அதில் இந்த வாரம் ஜனனி நாமினேட் ஆகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுளளது. ஆனால், அவர் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படவில்லை. பிக் பாஸ் வீட்டில் சில விதி மீறல்களை செய்ததால் அவர் இந்த வாரம் பிக் பாஸால் நேரடியாக நாமினேட் செய்யபட்டுள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் போட்டியாளர்கள் நீல அணி மற்றும் மஞ்சள் அணி இரு அணிகளாக பிரிக்கப்ட்டு சில டாஸ்க்குகளும் வழங்கபட்டன. இதில் இறுதியில் மும்தாஜ் தலைமையிலான மஞ்சள் அணி வெற்றி பெற்றது. இதனால் லக்ஸரி பட்ஜெட் மஞ்சள் அணிக்கு வழங்கப்பட்டது. இதில் லக்ஸரி பட்ஜெட்டை வெற்றி பெற்ற அணி மட்டுமே அவர்களுக்கான வழங்கப்பட உணவை உண்ண வேண்டும். ஆனால், நீல அணியை சேர்ந்த ஜனனி ஐயர் சமீபத்தில் மஞ்சள் அணி செய்த உணவை உண்டதால் அவர் விதி மீறல் செய்யப்பட்டார் என்று பிக் பாஸால் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

Janani-Iyer

கடந்த வாரம் நடைபெற்ற ‘எங்க ஏரியா உள்ள வராத’ டாஸ்கில் நீல அணியில் சிறப்பாக செயல்பட்ட சென்ராயனும், மஞ்சள் அணியில் சிறப்பாக செயல்பட்ட யாஷிகாவும் இந்த வாரம் நடைபெற உள்ள நாமினேஷன் ப்ராஸஸில் இருந்து தப்பித்துள்ளனர். அதே போல ஐஸ்வர்யா இந்த வார தலைவியாக இருப்பதால் அவரையும் நாமினேட் செய்ய முடியாது.

மேலும், வைஷ்ணவி தற்போது ரகசிய அறையில் இருக்கிறார். ஆனால்,அவர் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளார் என்று மற்ற போட்டியாளர்கள் நினைத்து வருகின்றனர். எனவே, ஜனனி தவிர்த்து மீதமுள்ள போட்டியாளர்களில் மும்தாஜ், ரித்விகா,பொன்னம்பலம், பாலாஜி, டேனி, ஷாரிக், மஹத் ஆகிய 7 நபர்களில் யாராவது சிலர் தான் இந்த வாரம் நாமினேஷனில் வர வாய்ப்புள்ளது.

Advertisement