நேற்றைய Eviction Process என்ன ஆச்சு .! பிக் பாஸ் Google Voting ஏன் வரவில்லை.! இதுதான் காரணமா.?

0
300

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றலங்களை புகுத்தியுள்ளனர்.அந்த வகையில் வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் திங்கள் கிழமை போட்டியாளக்கு நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்படும், ஆனால், நேற்று (ஜூலை 30)ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாததால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

Bigg-Boss

நேற்று ஒளிபரப்பான ஒரு ப்ரோமோ வீடியோவில் கூட நாமினேஷன் நடந்த சில காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் கடந்த வாரம் நடைபெற்றது போன்றே வெளிப்படையான நாமினேஷன் நடத்தப்பட்டு இருந்தது. மேலும், அந்த ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் மற்றும் மஹத் ஒருவரை ஒருவர் நாமினேட செய்கின்றனர். அதே போல பாலாஜி தன்னை தானே நாமினேட் செய்து கொள்வதாக கூறுகிறார்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ரஸஸ் நடைபெறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்சிகள் ஒளிபரப்பபடாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது நேரப்படற்குறை, எடிட்டிங் பிரச்சனையா காரணமாக ஒளிபரப்பபடவில்லையா அல்லது பிக் பாஸ் வேறு எதாவது ஆச்சரியத்தை இதில் அடக்கி வைத்துள்ளாரா என்பது இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியவரும். அதே போல கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியின் கடைசி 10-15 நிமிடங்களை வெறும் விளம்பரம் ஒளிபரப்பிய முடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் , இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளவர்கள் பட்டியலை விஜய் டிவியின் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் தற்போது வரை அப்டேட் செய்யப்படவில்லை. ஆனால், இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பட்டியலில் பொன்னம்பலம், பாலாஜி, ரித்விகா,மும்தாஜ், மஹத், ஷாரிக் ஆகியோர் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தற்போதய நிலவரப்படி ஷாரிக் தான் மிகவும் அடித்தட்டு வாக்குகளை பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.