பிக் பாஸில் அதிரடி மாற்றம்..! போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த கமல்.!

0
9970
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்கள் நிறைவடைந்து செமி பைனல் வாரத்தை எட்டியுள்ளது. நேற்று மும்தாஜ் வெளியேற்றபட்ட நிலையில் இன்னும் பாலாஜி, ரித்விகா, ஜனனி, யாஷிகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா மட்டுமே இருக்கின்றனர்.இதில் ஜனனி ஏற்கனவே நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார்.

- Advertisement -

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெற்ற நிலையில் இந்த சீசன் 105 நாட்களாக நீட்டிக்கபட்டுள்ளது. எனவே இன்னும் இரண்டு வாரங்கள் மீதமுள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி ஒன்றை அறிவித்தார் கமல். நேற்று அவர் பேசுகையில் அடுத்த வாரம் நாமினேஷன் கொஞ்சம் வித்யாசமாக நடைபெறும், அடுத்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று கூறியதும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிக் பாஸ் வரலாற்றிலே இதுவரை இரட்டை எலிமினேஷன் நடந்ததே இல்லை. எனவே, இந்த வாரம் ஜனனியை தவிர மீதமுள்ள 5 பேரில் 3 நபர்கள் மட்டுமே அடுத்த வாரம் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெறுவார்கள். அதில் அடுத்த ட்விஸ்ட்டாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர் அனைவரும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement