தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் ஓவியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
ஓவியா பற்றிய தகவல்:
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை.
ஓவியாவின் பழைய வீடியோ:
இந்த நிலையில் சிம்பு குறித்து ஓவியம் பேசியிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவரிடம் சிம்புவைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு ஓவியா கூறியிருந்தது, சிம்புவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள். அதில் சில பிரேக் அப் ஆகி விட்டார்கள்.
சிம்பு குறித்து ஓவியா சொன்னது:
பின் வேறு ஏதாவது சிம்புவை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டவுடன் உடனே ஓவியா, நான் என்ன சிம்பு Wife’ஆ? நான் என்ன தினமும் அவங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கேனா என்று கலாய்த்து கேட்டார். இந்த பழைய வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
சிம்பு பற்றிய தகவல்:
தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.