கடலில் கும்தா உடையில் கும்மாளம் போட்ட ஓவியா – வைரலாகும் பீச் ஷூட் புகைப்படம்.

0
395
Oviya-hellan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் ஓவியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பின் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.

- Advertisement -

ஓவியாவின் திரைப்பயணம்:

அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய தகவல்:

மேலும், தமிழில்பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் கடந்தும் ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஓவியா கலந்துகொள்வதாக இருந்தது. விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு ஓவியா வராத காரணம்:

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். தற்போது 7 வாரத்தை கடந்து நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஆனால், இதில் சில காரணங்களால் ஓவியவால் கலந்து கொள்ள முடியவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இது ஒரு பக்கமிருக்க, ஓவியா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

ஓவியா நீச்சல் உடை புகைப்படம்:

தன் ரசிகர்களுடன் உரையாடுவது, போட்டோஷுட் புகைப்படம், வீடியோ என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அதிலும் இவருடைய புகைப்படங்கள் எல்லாமே கியூட்டாக, அழகாக இருக்கும். இந்நிலையில் தற்போது ஓவியா அவர்கள் பீச்சில் நீச்சல் உடையில் எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறார்கள்.

Advertisement