முதன் முறையாக ஆரவ் திருமணம் குறித்து லைவ் சாட்டில் பேசிய ஓவியா – வைரலாகும் வீடியோ.

0
1343
oviya

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

Is this the advance reaction of Oviya to Aarav -Raahei marriage? - Tamil  News - IndiaGlitz.com

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த சீசன் மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வுடன் காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூறினார்.  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று நினைத்து வந்த நிலையில் ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி சில புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. 

- Advertisement -

ஆரவ்வும் , ஓவியம் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த அணைத்து கேள்விகளுக்கும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா,இதுகுறித்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. நிறைய சண்டைகள் நடந்தன. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம்.  ஆரவ் எனக்காக இருக்கிறார். அதே சமயம் ஆரவ்வுடன் நட்பு மட்டுமெ எனக் கூற முடியாது. இருப்பினும் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்வது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று கூறி இருந்தார் ஓவியா.

இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஓவியா கலந்துகொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசிய ஓவியா, ஆரவ் திருமணம் குறித்து பேசியதாவது. ஆரவ் திருமணம் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் நன்றாக இருக்கட்டும் மேலும் திருமணத்தின் போது லாக்கவுட் பிரச்சனையால் தான் கேரளாவில் மாற்றிக் கொண்டதால்தான் அவரது திருமணத்திற்கு வர இயலவில்லை என்று கூறியுள்ளார் ஓவியா.

-விளம்பரம்-
Advertisement