இதனால் தான் சட்ட ரீதியாக எதும் பண்ண முடியல, அவர்களை மீறி ஒன்னும் பண்ண முடியாது – பிக் பாஸ் மர்மங்களை போட்டுடைத்த ஓவியா.

0
113134
oviya
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சையை தடை செய்வது குறித்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் ஓவியா தான் முன்னோடி. வகைகள் பல பேர் இருக்கிறார்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என்று பல்வேறு வழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்களை கடந்திருக்கிறது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.

-விளம்பரம்-

இந்த சீசனில் எத்தனையோ பேர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் ஓவியா அளவிற்கு தற்போது வரை யாரும் பிரபலம் அடையவில்லை என்பது தான் உண்மை.பிக்பாஸ் வீட்டில் இவர் உண்மையாக இருந்தார் என்றும் போலியாக மற்றவர்களைப் போல நடிக்கவில்லை என்றும் இவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிந்தது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்தால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? இல்லை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் ? என்று கேட்டு இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர் தடை செய்ய வேண்டும் என்று பதிலளித்திருந்தார் .அதற்கு பதில் தெரிவித்த ஓவியா பிக்பாஸில் டிஆர்பி காக போட்டியாளர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு டார்ச்சர் செய்யக்கூடாது என்று பதிவிட்டிருந்தார். மேலும், ஒரு ரசிகர் இப்போது இதை பற்றி பேச என்ன காரணம் ? தற்போது உள்ள சூழ்நிலையிலாளா இல்லை 2017 இல் நடந்ததற்காகவா என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஓவியா தமிழ்நாட்டில் இன்னொரு ஸ்ரீசாந்தை பார்க்க நான் விரும்பவில்லை விடுங்க என்னுடைய தப்பு தான் என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர் நீங்கள் எப்படி சமூக வலைத்தளத்தில் பேசுவதற்கு பதிலாக இதற்கு ஒரு தீர்வை சொல்லலாமே என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஓவியா என்னால் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நானும்தான் அவர்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். மேலும், என்டிமால் போன்ற ஒரு மிகப் பெரிய நிறுவனத்துடன் போராடி என்னால் வெற்றிபெற முடியும் என்று நம்பவில்லை. என்னுடைய நம்பிக்கை அவர்கள் இதை பார்த்து அவர்கள் ஒப்பந்தத்தில் ஏதாவது திருத்தத்தை கொண்டு வருவார்கள் என்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதை நான் அப்போதே எப்படி சொல்லியிருக்க முடியும் நான் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன், என்னுடைய மனநிலை சரியில்லை என்று அறிவித்துவிட்டார்கள் தற்போது கூட என்னுடைய மன நிம்மதிக்காக தான் இதை சொல்லுகிறேன் கார்ப்பரேட் கம்பெனியில் அபாயகரமான உலகில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்று கூறியுள்ளார் அதேபோல ரசிகர் ஒருவர் மதுமிதா பப்ளிசிட்டிக்காக தான் செய்தார் என்று கூறியதற்கு, யாரும் பப்ளிசிட்டிக்காக கையை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று பதில் கொடுத்துள்ளார் .

மேலும் ரசிகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியை மூலமாகத்தான் உனக்கு எந்த அளவு பிரபலம் இருக்கிறது தெரிஞ்சுக்கோ என்று கூற அதற்கு ஓவியாவோ என் பிரபலத்தை விட உயிர் முக்கியம் என்று கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 வருடங்கள் கழித்து ஓவியா இப்படி எல்லாம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement