பொண்ணுங்களுக்கு இத சொல்லிக்கொடுக்கறத விட்டுடுட்டு பசங்களுக்கு இத சொல்லிக்கொடுங்க – Metoo குறித்து ஓவியா போட்ட டிவீட்.

0
712
Oviya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாகவே மோடி அரசுக்கு எதிராக ட்வீட் போட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரிடன் ட்விட்டர் வாசி ஒருவர், மோடி அரசின் செயல்பாகள் பற்றி கேட்டிருந்தார். அதற்கு தன்னுடைய மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஓவியா, அதில் ‘என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

- Advertisement -

அதே போல கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது ட்விட்டரில் பலரும், #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் பதிவிட்டனர். அப்போதும் ஓவியா, #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில்மீ டூ விவகாரத்தில் இவர் போட்ட பதிவு விவாத பொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் ஓவியா மீடூ குறித்து போட்ட பதிவில், உங்கள் மகள்களுக்கு தற்காப்பு மற்றும் #Metoo பற்றி சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.ஓவியாவின் இந்த கருத்தை சிலர் ஏற்றாலும் ஒரு சிலரோ எல்லா பெண்களும் ஒழுங்கு கிடையாது. ஆண்களை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement