தலைக்கேறிய புகழ் போதை, வெளியில் வந்ததும் ஓவர் அலப்பறை – அதிரடியாக கைது செட்டப்பட்ட பிக்பாஸ் 7 வின்னர்.

0
865
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்தியில் தான் இந்த நிகழ்ச்சி முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன் தான் தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சி பைனல் நடந்து முடிந்து இருக்கிறது. இதில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றிருக்கிறார். இவர்தான் பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். இவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்லவி பிரசாந்த் தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவர் youtube மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் ஒரு விவசாயி.

- Advertisement -

பல்லவி பிரசாந்த் குறித்த தகவல்:

இவர் youtube சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை, விவசாய வேலைகளை பற்றி வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். சோசியல் மீடியா மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவனம் பெற்று போராடி இந்த டைட்டிலை வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு விவசாயின் குழந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை அடுத்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம்:

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் விவசாயியின் மகனான பல்லவி பிரசாத்தை பார்க்கத்தான். அங்கு வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறிவிட்டது. அதோடு அவங்க வந்த ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பட்ட மற்ற போட்டியாளர்களை விமர்சித்து, அவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட்டு, அவர்களுடைய வாகனங்களையும் சேதப்படுத்தி இருந்தார்கள். இதனால் போலீசார் அந்த இடத்தில் இருந்து பல்லவி பிரசாந்த்தை வெளியேற்ற நினைத்தார்கள்.

-விளம்பரம்-

பல்லவி பிரசாந்த் மீது வழக்கு:

இதனால் போலீசுக்கும் பல்லவி பிரசாந்த்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப்பின் போலீசார் பல்லவி பிரசாந்த்தை வெளியேற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அமிர்தீப் அஸ்வின் மற்றும் கீது ஆகியோர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தெலுங்கானா போக்குவரத்து கழகத்தினுடைய ஆறு பேருந்துகளும், ஒரு போலீஸ் வாகனமும் ரசிகர்களால் தாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்கியவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

பொது மக்கள் கருத்து:

இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் பல்லவி பிரசாந்த் தான் என்று அவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு போடப்படுகிறது. இதற்கு ஜாமீன் கூட கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி நிறுத்த வேண்டும். இதனால் நிறைய அரசு மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர், பிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் இந்த சம்பவம் குறித்த வாக்குவாதம் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது.

Advertisement