என் அண்ணன் கூட தப்பு பண்ணும் போது என் கணவர் பாத்துட்டார்னு பழி சொன்னாங்க – கணவர் இறப்பு குறித்து பவானி.

0
21901
pavani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களில் பவனியும் ஒருவர். சின்னத்தம்பி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பவானிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-30.png

இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய கடந்து வந்த பாதையை குறித்து பேசிய பவானி ‘என் கணவரும் நானும் காதலித்து எங்கள் வீட்டில் தெரிவித்தோம். ஆனால், எங்கள் வீட்டில் சம்மதிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து நான்கு வருடங்கள் லிவிங் டு கெதர் முறையில் தனியாகத்தான் வாழ்ந்தோம். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின்னர் நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.

- Advertisement -

அப்போது என் கணவர் தான் எனக்கு ஆறுதல் சொன்னார். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். ஆனால், அவர் எனக்கு கூடப்பிறந்த அண்ணன் கிடையாது. ஆனால், அவரைத்தான் நான் அண்ணனாக நினைத்துக் கொண்டேன். நான் என் கணவர் மற்றும் எங்கள் அண்ணா மூவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் அண்ணன் பிறந்த நாளில் என்னுடைய கணவர் அதிகமாக குடித்து விட்டார். அப்போது அவர் சிகரெட் பிடித்தபோது நான் வேண்டாம் என்று தடுத்தேன். இதனால் அவர் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

நான் தொடர்பு கொண்டு பேச முயன்ற போதும் பேசவில்லை. பின்னர் வீட்டிற்கு வந்த அவர் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு தனியாக ஒரு அறையில் சென்று தாப்பாள் போட்டுக்கொண்டார். நானும் இப்போது பேசினால் சண்டை அதிகமாகும் என்று ஹாலில் படுத்து விட்டேன். என்னுடைய அண்ணா எங்கள் ரூமில் படுத்து விட்டா.ர் என்னுடைய கணவர் என் அண்ணன் தங்கும் அறையில் இருந்தார். அவர் அதிக குடிபோதையில் இருந்ததால் புடவையை எடுத்து ஹாலில் தூக்குப் போட்டு கொண்டார். ஆனால், உண்மையில் அவர் மிகவும் உயரமான ஆள், தூக்குப் போட்டுக் கொண்ட போது அவருடைய கால் கட்டிலில் தான் இருந்தது.

-விளம்பரம்-

ஆனாலும் அவர் உடல் சாய்ந்தபடி அப்படியே புடவை இருக்கி இறந்துவிட்டார். பின்னர் அதிகாலை அவருக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று நான் அவர் அறையை தட்டினேன். ஆனால், அவர் திறக்காததால் பின்னர் கதவை வேகமாக தள்ளி பார்த்தபோது அவர் கட்டிலில் அப்படியே சாய்ந்தபடி தூக்கில் தூங்கி கொண்டு இருந்தார். நானும் என் அண்ணனும் அவரை பிடித்து இறக்கிய போது அந்தப் புடவையில் முடிச்சு கூட இல்லை. அவரை பார்த்ததும் ஏண்டா இப்படி பண்ண என்று கதறி அழுதேன். அவர் இறந்தபோது கூட எனக்கு அழுகை வரவில்லை கோபம் தான் வந்தது. எப்படி எல்லாம் வாழலாம் என்று நினைத்து இருந்தேன்.

Bigg Boss 5: Pavni Reddy shares the sad truth about her married life! -  Tamil News - IndiaGlitz.com

அவர் இறந்த பின்னர் என்னை பற்றி பலரும் தவறாக பேசினார்கள். நான் அண்ணனோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தேன் அதை என் கணவர் பார்த்து விட்டதால் தான் இப்படி அவர் செய்து கொண்டார் என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து தான் அவரை ஏதோ செய்து விட்டோம் என்றெல்லாம் தவறாக பேசினார்கள். ஆனால், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் கணவரின் அம்மா மற்றும் அப்பா தான். என் கணவர் இறந்த பின்னர் நானும் இருந்துவிடலாம் என்றுதான் எண்ணினேன்.

அப்படியே ஆண்டுகள் சென்றது. பின்னர் மீண்டும் என்னை காதலிக்கும் நபர் ஒருவர் என் வாழ்வில் வந்தார் என்னுடைய அம்மா அப்பாவும் இன்னும் எத்தனை நாட்கள் எப்படி இருப்பாய் வேறு திருமணம் செய்து கொள் என்று சொன்னதால் நானும் அவரை திருமணம் செய்து கொள்ள தயாரானேன். ஆனால், அதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. இறுதி வரைக்கும் எனக்கு வாழ்க்கையில் யாரும் வரப்போவதில்லை என்று நினைத்து அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாகக் கூறி இருக்கிறார்.

Advertisement