ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
அந்த வகையில் பவானி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் வெற்றிகரமான ஒரு சிரியலாக இருந்து வந்தது. பிரபல நடிகர் ப்ரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.அவர் இறந்த போது பல சர்ச்சைகள் எழுந்தது.
அதிலும் குறிப்பாக பவானியும் இன்னொரு நடிகரும் மிக நெருக்கமாக இருந்தது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பவானி வெளியிட்டதால் மனம் உடைந்து போய் அவரது கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவியது. இப்படி ஒரு நிலையில் நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவானியின் வீடியோவில் தன் வாழ்கை குறித்து உருக்கமாக பேசி இருந்தார்.
அதில், 23 வயதில் நான் திருமணம் செய்து கொண்டு மனைவியாக இருக்க வேண்டும் என தான் ஆசைப்பட்டேன்.கணவர் வேலைக்கு போனால் நான் சமைத்து குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என தான் நினைத்தேன். நன்றாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் என் கணவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் இப்படி செய்துகொண்டால் இன்னொருவரை கு ற் ற ம் சொல்வார்கள். இவங்க எதோ பண்ணிருப்பாங்க என சொல்வாங்க.என்ன நடந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள். எனக்கு பெரிய இ ழப்பு இது. அந்த வ லியுடன் தான் நான் இப்போவரை பயணித்து கொண்டிருக்கிறேன் என்று உருக்கமுடன் கூறி இருந்தார்.