குறும்பட பஞ்சாயத்து, பிக் பாஸ் மீது குற்றம்சாட்டிய பாவனி – ஜூலி சொன்ன அதே காரணம்.

0
249
pavni
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் பாவனி ரெட்டி. அதோடு இவர் சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு சின்ன தம்பி சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதோடு பாவனி வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி சீரியல்களிலும், படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஆனால், ப்ரதீப் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்தார். இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் வின்னர்:

அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடத்தை பவானி பிடித்து உள்ளார்கள். இது ஒரு பக்கம், பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். அந்த வகையில் இந்த முறை அதிகம் பாவனி- அபிநய் குறித்த காதல் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பாவனி- அபிநய் காதல் குறித்த சர்ச்சை:

பின் வீட்டில் உள்ள எல்லோரும் இதை பற்றி கேட்க பாவனி யாரையும் காதலிக்கவில்லை. அபிநய் என்னிடம் நடந்து கொள்வது பிடிக்கவில்லை என்று ஒட்டுமொத்தமாக அபிநய் மீது பழி சுமத்தி இருந்தார். உடனே பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து இருந்தார் கமல். பின் இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பாவனி ரெட்டி குறும்பட விவகாரத்தில் பிக் பாஸ் மீது குறை சொல்லியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவனி ரெட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.

-விளம்பரம்-

பாவனி- அபிநய் குறித்த குறும்படம்:

அப்படி இருக்கும் போது ரசிகர் கேட்ட கேள்விக்கு பாவனி ரெட்டிபிக் பாஸ் மீது குறை கூறியுள்ளார் . அப்படி என்ன அவர் கூறியுள்ளார் என்றால், பாவனி- அபிநய் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்ததே. இது குறித்து பல குறும் படங்கள் வெளியாகி இருந்தது. அப்போது பாவனி பிடிக்காது என சொன்னதற்கு முன்பிருந்த வார்த்தைகளையும் பின்னர் இருக்கும் வார்த்தைகளையும் எடிட் செய்து வெளியிட்டு வந்தனர். இதனால் இந்த பிரச்சனை சர்ச்சையானது என்று விஜய் டிவி மீது புகார் பாவனி அளித்திருக்கிறார்.

பாவனி பதிவிட்ட டீவ்ட் :

தற்போது இவரின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் முதல் சீசனில் ஜூலி இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்து இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த 5 செகண்ட் முன்னாடி இருக்கும் காட்சியை போடுங்க என்று ஜூலி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்க்காக சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்லாமல் எடிட் செய்து போடுவது சிலருடைய வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருகின்றது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement