மகளிர் தினத்தன்று அமீர் உடனான திருமணம் குறித்து மனம் திறந்த பாவனி – வைரலாகும் வீடியோ.

0
443
pavni
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is amirpavani111-1024x576.jpg

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தும் சோசியல் மீடியா முழுவதும் அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சுகள் அதிகம் பேசப்பட்டு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி திறமையாக விளையாடி இருந்தார். அதேபோல் அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் , திருமணம் செய்து கொள்கிறேன், என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அமீர் – பாவனி சர்ச்சை :

ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்று சொல்லியும் மறுத்து வந்திருந்தார். இருந்தும் அமீர் விடாமல் தன்னுடைய காதலை தெளிவாக சொன்னார்.பின் ஒரு நாள் இரவில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது போல் ஒரு காட்சி வந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தும் அதை பற்றியே விமர்சனம் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

மகளீர் கல்லுரியில் பாவனி :

ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் மகளீர் தினத்தை முன்னிட்டு பவானி சென்னையில் உள்ள மகளீர் கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய பாவனி, பெண்கள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை புறக்கணித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும், கணவர்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது, சுதந்திரமாக இருக்க வேண்டும், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாவனி அறிவுரை வழங்கினார்.

-விளம்பரம்-

பாவானி வீட்டாரையும் கவர்ந்த அமீர் :

அதே போல பாவனி பேசிக்கொண்டு இருக்கும் போது அமீர் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த ரசிகைகள் பலர் அமீர், அமீர் என்று கோஷமிட்டனர். அதனை கேட்ட பாவனி ‘நீங்கள் அமீரை அழைத்து இருக்க வேண்டும். அவர் நல்லா இருக்கார். நாங்கள் இருவரும் நண்பர்கள். உங்களை போன்றே வீட்டிலும் உற்சாகமடைந்து இருக்கிறார்கள். கண்டிப்பாக எதாவது நடக்கும் போது நான் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார் பாவனி.

திருமணம் குறித்து பாவனி :

பிறகு அங்குள்ள மாணவிகள், திருமணத்தைப் பற்றி கேட்கும் போது, அதற்கு பாவனி’ நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், என்னுடைய வீட்டில் பொருத்தமான மாப்பிள்ளையை தேடுகிறார்கள் என்று கூறினார். உடனே மாணவிகள் கூட்டமாக’ “அமீர்” என்று கோஷமிடத் தொடங்கினர், அதற்கு பாவனி சிரித்தபடியே’ நட்பைத் தவிர தங்களுக்குள் எதுவும் இல்லை, அப்படி ஏதாவது நடந்தால், நானே சொல்லுவேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement