விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விதவிதமான ஆடைகளை அணிவது வழக்கம் தான். அதிலும் வார இறுதி என்றால் சொல்ல வேண்டியதே இல்லை, அனைவருமே ஸ்பெஷலான ஆடைகளை அணிவார்கள். எந்த ஒரு போட்டியாளர்களும் இதுவரை வார இறுதியில் ஒரே ஆடைகளை அணிந்து இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.
பாவணி மற்றும் சிபி ஆடை ரகசியம் :
உண்மையில் இந்த ஆடைகளை பிக் பாஸே அனுப்பி வைக்கிறாரா இல்லை எதாவது ஸ்பென்சர்கள் இருப்பார்களா என்ற கேள்வியும் உங்களுக்கு எழலாம். இந்த சீசனில் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் அதிகம் இருக்கும் நபர் என்றால் நிச்சயமாக பாவானியை சொல்லலாம். வார இறுதியில் இவர் அணியும் உடையில் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். உண்மையில் இவரது ஆடைகளை டிசைன் செய்து அனுபுவது இந்து கோபிராஜன் என்பவர் தான்.
டிசைனர் இந்து கோபிராஜன் :
கால் ஊணமடைந்து வீல் சேரில் இருக்கும் இவர் சக்கரம் போல சுழலும் ஒரு இளம் பெண். சென்னையை சேர்ந்த இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பின்னர் பேஷன் டிசைன் இன்ஸ்டிடியூட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக அந்த தொழில் தற்போது முடங்கி இருக்கிறது.
உடன் பிறவா அண்ணன் சிபி :
தற்போது இவர் சிபி மற்றும் பாவனிக்கு டிசைனராக இருந்து வருகிறார். மேலும், சிபி இவருக்கு மிகவும் நெருக்கமாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே அவரை இவருக்கு தெரியும். நீ தான் என் ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்று அவரே பிக் பாஸுக்கு முன் சொல்லி இருக்கிறார். அதே போல பாவனிக்கு மொத்தம் மூன்று டிசைனர்கள் இருக்கின்றனர். அதில் இந்துவும் ஒருவர் தான்.
இந்துவின் மற்ற வேலைபாடுகள் :
பாவனி வார இறுதியில் அணிந்த சில ஆடைகள் இவர் ஸ்டைல் செய்து அனுப்பியது தான். இந்த சீசன் மட்டுமல்லாது பல சீசன்களில் பங்கேற்ற பிக் பாஸ் போட்டியாளர்களும் இவருக்கு பரிட்சயம் தான். இவர் பிரபலங்களை போட்டோ ஷூட் செய்வது, ad ஷூட், ஆல்பம் சாங் போன்ற பல வற்றிற்கு ஆடைகளை வடிவமைத்து கொடுப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். பாவனி மட்டுமல்லாது யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, சுருதி பெரியசாமி, மதுமிதா போன்ற பலரை வைத்து இவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.