சர்ச்சை நாயகி மீரா மிதுன் நடித்த ரோலில் நடித்துள்ள பாவனி – வெளியான வீடியோ இதோ.

0
433
meera
- Advertisement -

மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடித்த படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறது. கடந்த நான்கு சீசன்களை விட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி பல மாற்றங்களுடன் செல்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

பாவனி திருமண வாழ்க்கை :

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பிரபலமான ஒருவர் தான் பாவனி ரெட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகை என்று சொல்லலாம். 2016ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவரின் கணவர் சில பிரச்சினைகளால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

- Advertisement -

பாவனியின் தெலுங்கு படம் :

அதற்குப்பின் பாவனி மனம் உடைந்துபோய் இருந்தார். பின் மீண்டும் இவர் சீரியல்கள், படங்களில் நடித்து வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் பாவனி தெலுங்கில் சேனாபதி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகி உள்ளது.

8 தோட்டாக்கள் ரீ மேக் :

மேலும், இந்த படம் தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிபிடத்தக்கது. இந்த படத்தில் தமிழில் மீராமிதுன் நடித்த கதாபாத்திரத்தில் தான் பாவனி ரெட்டி நடித்து உள்ளார். தற்போது இந்த சேனாபதி படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், தமிழில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 8 தோட்டாக்கள்.

-விளம்பரம்-

மாபெரும் வெற்றியடைந்த படம் :

இந்த படத்தில் வெற்றி ,எம்எஸ் பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஒரு இளம் காவலர் தனது துப்பாக்கியைத் தொலைத்து விடுகிறார். அவர் பறிகொடுத்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு இயல்பற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் பரபரப்பான நிகழ்வுகளைக் கொண்ட கதையாகவே 8 தோட்டாக்கள் அமைந்திருக்கிறது.

தற்போது பாவனி நடித்துள்ள சேனாபதி படத்தின் டிரைலர் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் பாவனி இறுதிப்போட்டிக்கு செல்வாரா? இல்லை பாதியிலேயே வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement