பிக் பாஸுக்கு பின் புது ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய பாவனி – வீடியோ இதோ.

0
457
Pavni
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பாவனி சம்பாதித்தது:

இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடத்தை பவானி பிடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பவானி ரெட்டிக்கு ஒரு வாரத்திற்கு – 1.25 லட்சம் ஒரு பேசப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவானி ரெட்டி:

இவர் மொத்தம் 105 நாட்கள் வீட்டில் இருந்தார். ஆகவே மொத்தமாக 18.75 லட்சம் பாவனிக்கு தரப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி ரெட்டி தனக்கு கொரோனா இருப்பதாகவும், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து ஆறுதல் கூறி இருந்தார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவானி ரெட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

-விளம்பரம்-

பவானியின் புது ஹேர் ஸ்டைல்:

இந்நிலையில் பவானி ரெட்டி சோசியல் மீடியாக்களில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், தற்போது பவானி புது ஹேர் ஸ்டைலுடன் மாறி இருக்கிறார். அவர் முடியை வெட்டி கலர் செய்து வித்தியாசமாக மாறியிருக்கிறார். அது சம்பந்தமான வீடியோவை தான் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்து பலரும் வியந்து போய் கமெண்டு போட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து லைக் செய்தும் ஷேர் செய்தும் வீடியோ வைரலாக்கி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாவனி இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்க பிளான் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அப்போ, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு இவர் படங்களில் கமிட்டாகி இருக்கலாம் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. பின் பவானி ரெட்டி படம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement