பிக் பாஸில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் பாவனி – இன்ஸ்டாவில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படங்கள்.

0
7590
pavni
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் வெற்றிகரமான ஒரு சிரியலாக இருந்து வந்தது. பிரபல நடிகர் ப்ரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Untitled-1-13-830x1024.jpg

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

- Advertisement -

இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் 442 எபிசோடுகளை கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நிறைவடைந்தது.இந்த தொடருக்கு பின்னர் பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராசாத்தி’ தொடரில் நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியலும் நிறைவடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-54-831x1024.jpg

சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி. சமூக வலைதளத்தில் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுஇருந்தார் . அந்த வகையில் இவர் படு கிளாமரான நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement