அமீரை மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா ? கதறி கதறி பாவனி எடுத்த திடீர் முடிவு. இதோ வீடியோ.

0
651
amir
- Advertisement -

பிக் பாஸ் ஜோடியில் தன் ஜோடியாக இருக்கும் அமீரை மாற்ற வழி இருக்கிறதா என்று பவானி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார்.

-விளம்பரம்-

இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : இதுவே மத்த நடிகர் நடிச்சி இருந்தா இப்படி சொல்லி இருப்பயா – ப்ளூ சட்டையின் ‘நெஞ்சுக்கு நீதி’ விமர்சனத்திற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

- Advertisement -

பாவனி திரைப்பயணம்:

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து இருந்தது. இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் சிறிய இடைவெளிக்கு பிறகு பாவனி சீரியல், படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அமீர்-பாவனி குறித்த தகவல்:

மேலும், சின்னத்தம்பி சீரியல் பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி இருந்தார் . அதிலும் அமீர்-பாவனி முத்த காட்சி சர்ச்சை கிளப்பி பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி :

இந்த சர்ச்சைகள் எல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்று மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார் பாவனி. அதேபோல் அமீர் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார்.இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து இருந்தது.

அமீரை மாற்ற வழி கேட்ட பாவனி :

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆட இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பாவனி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ஆடி முடித்த பின்னர் அமீர், பாவனியை பாடாய் படுத்தி இருக்கிறார். இதனால் கதறி இருக்கும் பாவனி ‘இந்த பாவி அமீரை மாற்ற எதாவது வழி இருக்கிறதா’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement