பிக் பாஸ் வீட்டு தொலைபேசியில் பேசியது இவர்தான்..! வெளிவந்த ரகசியம்.!

0
807
Janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (செப்டம்பர் 4) போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள்.

love-guru-with-radio-city

- Advertisement -

அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும். இதில் முதல் அழைப்பை எடுத்தார் ஐஸ்வர்யா, அந்த அழைப்பில் மறு முனையில் பேசிய குரலை நாம் கேட்ட போது ஏதோ பரிட்சியமான குரல் போலவே இருந்தது.

அது பிக் பாஸ் குரல் இல்லை என்று தோன்றினாலும், அந்த குரலை fm கேட்கும் ரசிகர்களுக்கு ஒரு பரிட்சியமான குரலாக தெரிந்தது. அந்த குரல் பிரபல ரேடியோ சிட்டி fm-ல் வரும் லவ் குருவின் குரலை போன்று தான் இருந்தது. தினமும் ரேடியோ சிட்டி fm -ல் தனது வசீகரமான குரல் மூலம் உண்மை காதல் கதைகளை அழகாக விவரித்து நமது நெஞ்சத்தை வருடியவர் லவ் குரு.

-விளம்பரம்-

Love-Guru

ஆனால், லவ் குருவிற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் என்ன சம்மந்தம், ஒரு வேலை லவ் குரு தான் பிக் பாஸ் குரலுக்கும் சொந்தக்காரரா என்ற ஒரு எண்ணமும் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் நேற்று ஐஸ்வர்யா மற்றும் ஜனனியிடம் பேசிய அந்த குரல் பிக் பாஸ் தனது சாதாரண குரலில் பேசியது போல தான் இருந்தது.

Advertisement