40 வருட ஏக்கம்..! கண்கலங்கிய பொன்னம்பலம்.! ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ்

0
335
kamal
kamal

வாரம் முழுவதும் சற்று மந்தமாக ஓடும் பிக் பாஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாக மாறி விடுகிறது. இதற்கு ஏவிக்ஷன் அறிவிப்பு ஒரு முக்கிய காரணம் என்றால், நடிகர் கமல் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவது மேலும் ஒரு சுவாரசியமான காரணமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 28) நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னம்பலத்தை மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளார் நடிகர் கமல்.

Ponambalam

பிக் பாஸ் வீட்டில் சற்று முரட்டு தனமான போட்டியாளராக இருந்து வருவது நடிகர் பொன்னம்பலம் தான். பார்ப்பதற்கு கொஞ்சம் கரடு முரடான ஆளாக இருந்தாலும் இந்த மனிதருக்குள்ளும் ஒரு ஏக்கமும் வலியும் இருந்துள்ளது என்று சென்ற வாரம் கமலுடன் அகம் டிவி வழியாக நடிகர் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்த போது தெரிந்தது.

தனது சிறு வயதில் நடிகர் பொன்னம்மபலம் துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பல விளையாட்டுகளில் சிறந்து விளக்கியுள்ளார். இவரது சிறுவயதில் இவரை பள்ளியில் சேர்த்துவிட்டு ஒரு நல்ல ஊக்கத்தை கொடுத்தது இவரது ஆசிரியர் அமுல் தாஸ் என்பவர் தான் என்றும், அவர் தான் தன்னை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் சென்ற வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

Amul-Raj
Amul-Raj

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்திற்கு ஊக்கமாக இருந்த அந்த ஆசிரியரை அகம் டிவி வழியாக பொன்னம்மபலத்தை சந்திக்க வைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கமல்.தனது ஆசிரியரை கண்ட நடிகர் பொன்னம்பலம் மிகவும் மகழ்ச்சியடைந்து நடிகர் கமலுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.