பொன்னம்பலம் ஐயா..! பொறுத்தது போதும் போட்டு ஒடச்சிடுங்க.! பிரபல சீரியல் நடிகர்.!

0
1168
- Advertisement -

நேற்று (ஜூலை 8)நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்தின் பேச்சு அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. பிக் பாஸ் வீட்டில் சில போட்டியாளர்கள் அத்து மீறி நடப்பதையும், தமிழ் கலாச்சாரம் பாதுகாக்க படவேண்டும் என்பது குறித்தும் பேசிய பொன்னம்மபலத்தின் பேச்சை நடிகர் கமலும் வரவேற்றார். தற்போது அனைவரும் இவரின் பேச்சை வரவேற்று வரும் நிலையில் நடிகர் ரியோவும் நடிகர் பொன்னம்பலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Ponnambalam-In-The-Bigg-Boss-House

- Advertisement -

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனந்த் வைத்தியநாதன் தனக்கு கிடைத்த சிறப்பு அதிகாரத்தின் மூலம் நடிகர் பொன்னம்பலம் பெண்களை தவறாக பேசி விட்டார் என்று கூறி அவரை பிக் பாஸ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்து விட்டார். அதன் பின்பும் நடிகர் பொன்னம்பலம் , நடிகர் கமலிடம் நேற்று நடந்ததை பார்த்தீர்களா என்று எதோ கூற வந்தார் , ஆனால் , நடிகர் கமல் அவரது பேச்சை நிறுத்தி விட்டார்.

நடிகர் பொன்னம்பலம் ”யாஷிகா, மஹத் , ஐஸ்வர்யா ஷாரிக் ஆகியோர்களை செய்த அநாகரீக செயலை தான் சுட்டி காட்டினார் என்று அனைவருக்கும் தெரிந்தது. இருப்பினும் நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட நடிகர் பொன்னம்பலத்திடம் , யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்திற்க்கு ஆதரவாக சீரியல் நடிகர் ரியோ ராஜ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “சினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடைத்தால் என்ன செய்யும் தெரியுமா. பொன்னம்பலம் ஐயா பொறுத்தது போதும் போட்டு ஒடச்சிடுங்க ” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement