பிக்பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” செய்யப்பட்ட போட்டியாளர் .! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
315
bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்தகட்ட எலிமிநேஷன் கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக்கிற்கு பின்னர் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்று அறிந்து கொள்ள மக்கள் ஆவளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வார நாமினஷன் லிஸ்டில் பொண்ணபலம், சென்றயான் ஜனனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்த யாஷிகா, ஜனனியை நேரடியாக நாமினேஷன் செய்திருந்தார். கடந்த 5 நாட்களாக வாக்களிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் பொன்னம்பலத்திற்கு மிகவும் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளார்.

Ponnambalam

நமது வலைத்தளத்தில் நடத்தப்பட்ட வாக்கு பதிவிலும் பொன்னம்பலத்திற்கு தான் கம்மியான வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே போல மற்ற வலைத்தளத்தில் நடத்தப்ட்ட வாக்குபதிவில் கூட சென்றாயன், ஜனனியை ஒப்பிடுகையில் பொன்னம்மபலம் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளார். பொன்னம்பலம் இதுவரை பல முறை நாமினேஷனில் வந்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் பொன்னம்பலம் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

ஆனால், இந்த வாரம் இவருக்கு போட்டியாக இருந்த ஜனனி மற்றும் சென்றாயனை ஒப்பிடுகையில் பொன்னம்பலம் ஒரு பலவீனமான போட்டியாளராகவே மக்கள் கருதியதால் இந்த வாரம் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார். கடந்த இரண்டு வாரம் முன்பு வரை பொன்னம்பலத்திற்கு நல்ல ஆதரவு இருந்து வந்தது. கடந்த நாமினேஷனில் கூட பொன்னம்பலம் காப்பற்றபட்டிருந்தார். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற சில டாஸ்குகளில் பொன்னம்பலம் கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொண்டது போல காட்டப்பட்டது.

Ponnambalam-In-The-Bigg-Boss-House

மேலும், கமல் அவர்களும் பொன்னம்பலத்திற்கு குறும் படமெல்லாம் போட்டு காண்பித்து பொன்னம்பலம் பெண்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டீர்கள் என்று கடித்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா, ராணி டாஸ்க் செய்த போது பொன்னம்பலம் விதியை மீறி நடந்து கொண்டார் என்று அவருக்கு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.