இத்தனை மனைவி…குழந்தைகளா..! பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.! கேட்டா நம்ப மாட்டீங்க

0
865
Ponnambalam

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது போட்டியாளராக நடிகர் பொன்னம்மபலம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். கடந்த பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து வந்த பொன்னம்பலம், மக்களால் காப்பாற்றுபட்டு வந்தார். ஆனால், இம்முறை மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள்.

Ponnambalam-In-The-Bigg-Boss-House

- Advertisement -

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம், கமலுடன் மேடையில் பேசிகொண்டிருந்த போது தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் ‘என்னுடைய அப்பாவிற்க்கு நான்கு மனைவிகள். அதில் நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தைதான் நான். எனக்கு பின்பு நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தங்கள் போன்று தான். அவ்வளவு பெரிய குடும்பம் எங்களுடையது’ என்று கூறியிருந்தார்.

இதனை கேட்ட போட்டியாளர்கள் மிகவும் வாயடைத்து போகினார்.சில வாரங்களுக்கு முன்பு கமலிடம் அகம் டிவி வழியே பேசிக்கொண்டிருந்த பொன்னம்பலம் , சிறு வயதில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தன்னை பள்ளிக்கூடத்தில் கூட சேர்க்கமுடியாமல் வீட்டில் கஷ்டம் நிலவியதால், ஒரு ஆசிரியர் தான் தன்னை பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் ‘என்று உருக்கமுடன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Bigg-Boss

பொன்னம்மபலம். பல்வேறு கஷ்டங்களை தாண்டி தான் பொன்னம்பலம் சினிமாவில் இந்த இடத்திற்கு வந்துள்ளார். என்வே, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பொன்னம்பலத்திற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement