கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு எப்படி நடந்தது என்பதை பற்றி அதிர்ச்சியூட்டும் விஷியத்தை சமீபத்தில் உடகாத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார்.
பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் .
சிறுநீரகம் செயலிழப்பு ;
இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவிசெய்து இருந்தார். மேலும், பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது நல்லபடியாக இருந்து வருகிறார்.
சிறுநீரகம் செயலிழக்க காரணம் ;
இந்த நிலையில் தான் பொன்னம்பலம் தனக்கு சிறுநீரக எப்படி செயலிழந்தது என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அவர் பேசுகையில் என்னுடைய சிறுநீரக செயலிழப்புக்கு குடிப்பழக்கம் காரணம் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கு காரணம் வேறு. என்னுடைய அப்பவிற்கு 4 மனைவிகள். அவர்களில் 4வது தாரத்திற்கு பிறந்தவர் தான் நான். இருந்தாலும் 4 மனைவிகளின் அவர்களது பிழைகளும் ஒற்றுமையாக ஒன்றாகத்தான் வாழ்ந்தோம்.
சகோதரர் செய்த துரோகம் :
ஆனால் 3வது அம்மாவின் மகன், என்னுடைய மூத்த சகோதரர் எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து விட்டார். அதற்கு காரணம் நான் அப்போது பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக இருந்தேன். இதனால் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் பொறாமை பட்ட என்னுடைய அன்னான் எனக்கு ஒரு முறை மதுபானத்தில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்தார், மற்றொரு முறை சாப்பாட்டில் கலந்து கொடுத்தார். அது எனக்கு அப்போது இவர்தான் கொடுத்தார் என தெரியவில்லை. அதற்கு பிறகு உடல் சோர்வடைய ஆரம்பித்தது.
எனக்கு மாந்திரீக பொம்மை ;
இதனை நான் அறிந்து கொண்டது ஒரு முறை மனது சரியில்லை என்று யோசித்து மொட்டை மடியில் உள்ள பால்கனியின் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய 3வது அம்மாவின் மகனாகிய என்னுடைய மூத்த அண்ணனும் என்னுடைய உதவியாளரும் வீட்டின் பின்பக்கத்தில் குழி தோண்டி மாந்த்ரீக பொம்மை, என்னுடைய லுங்கியில் ஒரு பகுதி என பலவற்றை வைத்திருந்தனர். நான் பின்னர் காலையில் அவர்களிடம் கேட்டதில் உண்மை தெரிந்தது பின்னர் அவர்களிடம் இருந்து விலகிவிட்டேன் என்று கூறினார் பொன்னம்பலம்.
சொந்த சகோதரரே இப்படி ஸ்லோ பாய்சன் கொடுத்தால் அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நடந்து சாவின் விளிம்பிற்கே சென்று வந்துவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த விஷியத்தினால் எனக்கு தற்போது பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து கடவுளின் அருளாலும், என்னுடைய ரசிகர்கள், சக நடிகர்களின் அன்பினாலும் நான் தற்போது நன்றாக இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறினார் பொன்னம்பலம். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.