பொன்னம்பலம் “Eliminate” ஆகவில்லை.! இவரால்தான் வெளியே வந்தேன்.! ரகசியத்தை உடைத்த பொன்னம்பலம்.!

0
266
Ponnambalam

மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் தான் சற்று சுவாரசியத்தை கூட்டினார் என்றே கூறலாம். இவர் நிகழ்ச்சியில் இருந்து வரை மற்ற போட்டியாளர்கள் செய்யும் அத்துமீறல்களை தைரியமாக கேட்டு வந்தார். இருப்பினும் பெண் போட்டியாளர்களை சற்று கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதால் இவரது பெயர் சற்று டேமேஜ் ஆனது.

ponambalam-bigg-boss

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் இளம் போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்து வந்த நடிகர் பொன்னம்பலம், இதுவரை அதிக முறை நாமினேஷனில் வந்த நபர் என்றும் கூறலாம். இருப்பினும் ஒவ்வொரு வாரமும் மக்களால் இவர் காப்பாற்றுபட்டு வந்தார். ஆனால், கடந்த வாரம் நாமினேஷனில் போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டர்.

பொன்னம்பலம் தன்னுடன்நாமினேட்டான மற்ற போட்டியாளர்களைவிட கம்மியான வாக்குக்கள் பெற்றதால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார் என்று ரசிகர்கள் எண்ணிவந்த நிலையில்,பிக் பாஸ்ஸிடம் கேட்டு, இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமே வெளிவந்ததாக நடிகர் பொன்னாபலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.

Ponnambalam-In-The-Bigg-Boss-House

பிபி பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பல்வேறு பேட்டிகளில் பங்குபெற்று வருகிறார் நடிகர் பொன்மபலம். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற பொன்னலாம்பலம், நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, மஹத் ஒருமுறை என்னிடம் ‘இளைஞ்ர்களுக்கு வழி விடுங்கள் என்று கூறியிருந்ததார்’ அதனால் இளைய சந்ததிகளுக்கு இடம் விட்டு நானே பிக்பாஸிடம் கேட்டு வெளியே வந்துவிட்டேன்’ என்று பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் பொன்னம்பலம், சினிமாவில் நிறைய சாதித்து விட்டார், ஆனால், மற்ற போட்டியார்களுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மிக பெரிய சந்தர்ப்பம் என்பதை சுட்டிகாட்டி ஒருவேளை மஹத், ‘இளைஞ்ர்களுக்கு வழி விடுங்கள்’ என்று பொன்னம்மபலத்திடம் கூறியிருக்கலாம். அதனால் ஒருவேளை நடிகர் பொன்னம்பலம், மஹத் கூறியது போலவே இளம் சந்ததிகளுக்கு வழிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தமாகவே வெளியிறிவிட்டாரோ என்னவோ என்று எண்ணம் தோன்றுகிறது.