பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா மாயாவிடம் புலம்பி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமும் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது.
இதனால் ஜோவிகா தான் கடந்த வாரம் வெளியேறி இருந்தார். ஜோவிகா வெளியேற்றப்பட்ட முக்கிய காரணமே அவர் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து கேங் கேம் ஆடியதும், வீட்டில் அடிக்கடி தூங்கியதும் தான் என்று கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். பின் இந்த வார கேப்டன் விஷ்ணு. இவர் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக டீம் போட்டு விளையாடி வரும் மாயா – பூர்ணிமா, மணி – ரவீனா ஆகிய இரண்டு ஜோடியையும் தனி தனியாக பிரித்து இருக்கிறார் விஷ்ணு. பின் வீட்டில் பொறுப்பே இல்லை என்ற இரண்டு நபரை தேர்ந்தெடுத்து ஷாப்பிங்கிற்கு அனுப்புமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாயா மற்றும் அனன்யாவை விஷ்ணு தேர்தெடுத்தாதல் கடுப்பான மாயா ‘ நீங்கள் கேப்டன் ஆனதே ஒரு ஸ்டேட்டர்ஜி தான். நீங்கள் என்னையும் பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிறீர்கள் என்பது வரை நான் சொல்வேன் என்று கொந்தளித்து இருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா, இந்த வாரம் ஜாலியா இருக்கலாம், பார்ட்டி பண்ணலாம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், என்னை எல்லோரும் ஏமாத்துறாங்க. இந்த வாரம் என்டில் ஃபேவரிடிசம் பண்ணுறாங்கன்னு அவ்வளவு பேசினேன். ஆனால் உங்களுக்கு தான் ஸ்டார் கொடுத்தாங்க. மறுபடியும் மறுபடியும் என்னை ஏமாத்துறாங்க. என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க என்று எனக்கு தோன்றுகிறது என்று சொல்கிறார்.
உடனே மாயா, ஆமாம், நீ சொல்வது சரிதான் என்று அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார். இப்படி பூர்ணிமா புலம்பி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. பூர்ணிமா புலம்புவதற்கு காரணம் விஷ்ணு தான். கடந்த சில வாரங்களுக்கு முன் விஷ்ணு-பூர்ணிமா நன்றாக நெருக்கமாக பேசி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரத்தில் குறிப்பாக, பார்க்கிங் படக்குழு வந்து போனதில் இருந்து விஷ்ணு பூர்ணிமாவிடம் இருந்து விலகி இருக்கிறார். இதற்காக தான் பூர்ணிமா புலம்பி அழுகிறார் என்று கூறுகிறார்கள்.