பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டிற்கு விஜய் டிவி கொடுத்திருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிக் பாஸ் கவிஞனின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
நடிகை அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அருவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் என்ற படத்தில் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்தின் மூலம் தான். இந்த படத்தில் பிரதீப் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பிரதீப் ஆண்டனி குறித்த தகவல்:
அதோடு இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருக்கிறார். மேலும், பிரதீப்க்கு நடிகர் ஆகுவதை இயக்குனர் மீது தான் அதிக ஆர்வம். இதற்காக இவர் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். பின் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி இருந்தார்.
ரெட் கார்ட் கொடுத்த காரணம்:
இடையில் ப்ரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தான் பிரதீப்க்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உருவாகி இருந்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவுக்கு கூட பிரதீப் வரவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரதீப்:
மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் வராதது, நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சொல்லப்போனால், முதல் சீசன்னில் ஓவியா எப்படி பிரபலமானாரோ அதே போல் ஏழாவது சீசன் மூலம் மிகப்பெரிய அளவுக்கு பிரதீப் பிரபலமானார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அந்த படம் குறித்த அப்டேட் எல்லாம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவி கொடுத்த பரிசு:
இந்த நிலையில் இன்று பிரதீப் ஆண்டனிக்கு பிறந்தநாள். தற்போது இவருக்கு 34 வயதாகிறது. இதை ஒட்டி பிரதீப், காசை தவிர எல்லாத்தையும் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்றெல்லாம் காலையிலேயே சோசியல் மீடியாவில் புலம்பி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி அவருக்கு முதன்முதலாக வாழ்த்துக்கள் சொல்லி பொக்கே அனுப்பி வைத்து இருக்கிறது. இது அடுத்து பிரதீப் இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதன் மூலம் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரதீப் ஆண்டனி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது