சில வாரமாவே சோசியல் மீடியா முழுவதும் கண்மணி- நவீன் காதல் குறித்த கருத்து தான் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். அதிலும் இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள்.
இதன் மூலம் இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிற தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் பாருங்க : ரகசியமாக நிச்சயதார்தத்தையே முடித்த நிக்கி கல்ராணி மற்றும் ஆதி. எப்போ தெரியுமா ?
நடிகர் நவீன் திரைப்பயணம்:
இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே உள்ளது.
இதயத்தை திருடாதே சீரியல்:
மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நவீனும், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். இது காதல் திருமணம் இல்லை இரு வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருக்கின்றன.
கண்மணி லைவ் வீடியோ:
அதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையுமே அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவிர நவீன், கண்மணிக்காக பாடிய காதல் பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது. இதனால் கண்மணி- நவீன் ஜோடி குறித்து நிறைய பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கண்மணி லைவ்வில் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எதுனாலும் பேஸ் பண்ணி விடலாம் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.
ரசிகர்களுக்கு கண்மணி சொன்னது:
என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே எதிர்பாராதது தான். இப்ப வரைக்கும் எதிர்பாராதது தான் நடந்திருக்கிறது. உங்களுடைய சப்போர்ட்டுக்கு நன்றி. நல்லபடியா என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரமே அது தொடர்பாக விரைவில் உங்களுக்கு லைவ்வில் எல்லார்கிட்டயும் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.
மேடையில் காதலை சொன்ன நவீன் :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நவீன் மற்றும் கண்மணி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது இருவருமே தங்கள் காதலை மக்கள் முன்பு முதன் முறையாக வெளிப்படுத்தினர். அப்போது பேசிய கண்மணி ‘என் அப்பாவை போல ஒருத்தர் கிடைத்துவிட்டார்’ என்று கூறி இருந்தார். மேடையில் கண்மணி இப்படிப் பேசிக்கொண்டு இருக்கும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த பிரியங்கா கலங்கி இருக்கிறார்.