விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்று சொன்னால் அதை “ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி” என்றும் சொல்லலாம். மேலும், வருடம் வருடம் ஜூனியர், சீனியர் சென்று நடக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள மக்களிடையேயும் பயங்கர வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் நடை பெற்றது தான் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4 செல்லக் குரலுக்கான தேடல். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு சில பேரு மட்டும் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள்.
இந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் ஜெஸ்ஸிகா. மேலும், இவர் தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்து விட்டார். தற்போது கூட தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். ஜெசிக்கா யூட் யால்பானம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே பாட்டு பாடுவதில் அதிக ஆர்வம் உடையவர். இவர் கனடா வாழ் ஈழத் தமிழர் ஆவார். இவர்கள் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ்களின் திரிஷா. ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா ? இதோ புகைப்படம்.
இவருடைய தந்தை யூட். அதுமட்டும் இல்லாமல் ஜெசிக்கா சூப்பர் சிங்கரில் இறுதிச் சுற்றில் பாடிய “விடைகொடு எங்கள் நாடே, தோல்வி நிலையென நினைத்து” என்ற பாடல் இன்றும் வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது. மேலும், உணர்வுபூர்வமான அந்த பாடலை இப்போது கேட்கும் போது கூட உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
அதோடு ஜெசிக்கா அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றதை விட எங்கள் மக்களின் வலிகளை மக்கள் மனதில் பதிய வைத்தது தான் எனது வெற்றி என்றும் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் ஞானம் எழுதி அக்னி கணேஷ் இசை அமைத்துள்ள ‘சரவண பொய்கை’ என்ற பாடலை சென்னையில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடியுள்ளதன் மூலம் இவர் தொழில் முறையாகவும் பாடகி ஆனார் என்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சில வருடங்களுக்கு முன்னால் ஜெசிக்கா அவர்கள் ‘உயிரும் நீயே’ என்று அன்னையர் தினத்துக்காக பாடிய வீடியோவும் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ஜெசிக்கா அவர்கள் வளர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் எல்லாம் சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா?? என்று ஆச்சரியத்திலும், வியப்பிலும் உள்ளதாக தெரிய வந்து உள்ளது. அதோடு ஜெசிக்கா இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.