‘நான் உன்ன காப்பாத்திஇருக்கனும் இல்ல’ – அபிநய்யிடம் நாடகமாடிய பிரியங்கா – அப்போ இது என்ன ? வைரலாகும் குறும்படம்.

0
517
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் இருந்து அபிநய் வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். கடந்த அனைவரும் நாமினேட் ஆகி இருந்ததால் நமினேஷனில் இருந்து தப்பிக்க கடந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வந்தது . இதில் முதல் இரண்டு டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார்.

- Advertisement -

இதன் மூலம் இவர்கள் இருவரும் இந்த வார நமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தனர். அதன் பின்னர் பல விதமான டாஸ்குகள் நடைபெற்றது. அதில்,ஒரு டாஸ்கில் தாமரை மற்றும் அபிநய் கடைசி வரை விளையாடினர் அதில் தாமரை வெற்றி பெற்று அவரும் நாமிநேஷனில் இருந்து தப்பித்தார். பின்னர் இறுதியாக சஞ்சீவ், ராஜு, பிரியங்கா, அக்ஷரா, வருன், அபிநய் ஆகிய 6 பேர் மட்டும் இருந்தனர்.

இறுதி டாஸ்கில் இந்த 5 பேருக்கு மட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாவனி – அமீர், ராஜு – சஞ்சீவ், அபிநய் – பிரியங்கா ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்று விளையாடினர். இதில் பிரியங்கா – அபிநய் விளையாடிய போது இருவரும் தங்கள் புகைப்படங்களை காட்டி தங்களை save செய்ய நனைத்ததால் இருவரும் நாமினேஷனில் தொடர்ந்தனர்.

-விளம்பரம்-

ஒரு வேலை பிரியங்கா, அபிநய்யின் புகைப்படத்தை காட்டி இருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருப்பார். இப்படி ஒரு நிலையில் நேற்று அபிநய் வெளியேறிய போது அபிநய்யை கட்டிப்பிடித்து அழுத பிரியங்கா, நான் உன்னை காப்பற்றி இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், அவர் அபிநய்யை வேண்டுமென்றே காப்பாத்தவில்லை. இது தொடர்பான குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த இறுதி டாஸ்க் முடிந்த பின்னர் பாவனியிடம் , அபிநய் குறித்து பேசிய பிரியங்கா ‘எனக்கு எதிரில் வேறு யாரவது இருந்திருந்தால் நான் அவனை காப்பாற்றியிருப்பேன்.

எனக்கு அதற்கான காரணம் இருக்கிறது. அந்த காரணம் இங்கு யாருக்கும் தெரியாது’ என்று பேசி இருக்கிறார். இதேபோலத்தான் அண்ணாச்சி வெளியேறிய போது அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் பிரியங்கா. ஆனால் அந்த வாரம் அண்ணாச்சியை நாமினேட் செய்து இருந்ததே பிரியங்கா தான். இப்படி பிரியங்காவின் நாடகத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கழுவி ஓடி வருகிறார்கள்.

Advertisement