பாடாய் படுத்திய மன்சூர் அலிகான், மாட்டிக்கொண்டு முழிக்கும் ப்ரியங்கா – வைரலாகும் வீடியோ.

0
573
priyanka
- Advertisement -

விஜய் டிவி தொகுப்பாளனி பிரியங்காவை மன்சூர் அலிகான் படாதபாடு செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

-விளம்பரம்-

மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனிடையே சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு இருக்கிறது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் என்றும், 2500 வீடு அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

- Advertisement -

மன்சூர் அலிகான்:

அதன் காரணமாக அரசு நிலத்தை மீட்கும் பொறுப்பில் சில மாதங்களுக்கு முன் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி வழக்கு தொடர்ந்திருந்தார். இன்னொரு பக்கம், இவர் படத்தில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

மன்சூர் அலிகான் குறித்த தகவல்:

இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் மன்சூர் அலிகான் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்போது மன்சூர் அலிகான் பற்றி பேசினாரா, அப்போது முதல் மன்சூர் பற்றிய பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், சமீப காலமாக மன்சூர் அலிகான் பேட்டிகளில் மாஸ் செய்து வருகிறார்.

-விளம்பரம்-

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி:

இந்நிலையில் தொகுப்பாளர் பிரியங்காவை மன்சூர் அலிகான் படாத பாடுபடுத்தி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் டைட்டில் வின்னரும், நடிகருமான ராஜூ தான் தொகுத்து வழங்கி வருகிறார். ராஜுவுடன் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, மதுரை முத்து, ராமர் போன்ற பலரும் கலந்து கொண்டு ஃபன் செய்து வருகின்றனர். வாராவாரம் இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவி பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் அழைத்து வந்து என்டர்டைன்மென்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.

மன்சூர் அலிகான் செய்த சேட்டை:

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டிருக்கின்றார்.
பின் மன்சூர் அலிகான், பிரியங்கா உடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ராமரும் மன்சூர் அலிகான் போலவே உடை அணிந்து அவரை கலாய்த்து இருக்கிறார். இருந்தாலும் மன்சூர் அலிகான் ராமரை படுத்தி எடுத்து இருக்கிறார். தற்போது இதற்கான ப்ரோமோ தான் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன்

Advertisement