முழு வனிதாவாக மாறிய ஜோவிகா – வயது வித்யாசம் பார்க்காமல் பிரதீப்பை வாடா,போடா என்று திட்டிய ஜோவிகா.

0
1602
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதோடு கேப்டனால் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள்.

இப்படி கடந்த வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அதோடு முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் பவா தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது மொத்தம் 16 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்று இருக்கிறது. அதில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் மாயா தப்பித்து விட்டார் என்று கூறி வருகின்றனர். இப்படி ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் பிக் பாஸ் வீட்டிற்கும் கலவரம் வெடித்து இருக்கிறது. இதில் ஜோவிகா, பிரதீப்பை வாடா போடா என்று ஒருமையில் பேசி இருக்கிறார்.

Advertisement