நீங்க அப்படி பண்ணது தப்பு – ஆரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் அனிதா .

0
710
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நேற்றய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜட் டாஸ்கின் அடிப்படையில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் 1 -ல் இருந்து 13 வரை வரிசைபடுத்துமாறு கூறப்பட்டு இருந்தது .

- Advertisement -

இதில் அனிதா தனக்கு இரண்டாவது இடம்தான் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். ஆனால், அவருக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை ஏற்க மறுத்து அடம் பிடித்த அனிதாவிற்கு இறுதியில் பத்தாம் இடம்தான் கிடைத்தது. மற்றவர்கள் அனைவரும் அனிதாவை சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால், இதுவரை சமாதானமாக அனிதா தனக்கான இடம் இங்கே இல்லை என்று இறுதிவரை நிற்காமல் சென்று விட்டார்.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கின் போது பல்வேறு விவாதங்கள் எழுந்தது. அவ்வளவு ஏன் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் விவாதம் சென்றபோது ஒருகட்டத்தில் கடுப்பான பாலாஜி உன்னிடம் போய் நான் பேசினேன் என்று கூறி தன் காலில் இருந்த செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்துக் கொண்டது பெரும் வேடிக்கையாக இருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் நேற்றய நிகழ்ச்சியில் சனமிற்கு எதற்காக நீங்கள் வாக்களித்தீர்கள் என்று அனிதா ஆரியிடம் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement