பிக் பாஸில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சனம் ஷெட்டி (11 Vote), ஷிவானி (6 Vote) சம்யுக்தா(5 vote) ரேகா (4 vote), ஆஜீத் (2 Vote), ரம்யா (2 Vote), கேப்ரில்லா (2 vote) ஆகியோர் இடம்பெற்றுள்னர்.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக ‘Eviction Free Paas’ என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கைப்படற இந்த வாரம் தகுயற்றவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் கலந்து பேசி இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ‘Eviction Free Paas’ ஐ வெற்றி பெரும் நபர் இந்த சீசன் முழுதும் ஏவிக்ஷனில் இடம்பெற மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற 8 பேரும் காரசாரமாக விவாதத்தினர். கடைசியில் சுரேஷ், ரம்யா, அஜீத் இருந்த நிலையில் சுரேஷ்ஷின் தந்திர வேலையை கண்டுபிடித்த ரம்யா இறுதியில் அவரை வெளியேற வைத்தார். இதில் இறுதியில் அஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இவர் இந்த சீசன் முழக்க நாமினேஷனில் இடம்பெறவே மாட்டார்.
இந்த ‘Eviction Free Paas’ இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவித்தபோது இந்த டாஸ்க்கில் கலந்துகொண்டு எட்டு பேர் உட்பட போட்டியாளர்கள் கூட யாரோ ஒருவர் இந்த சீசன் முழுவதும் ஏவிக்ஷனில் இடம்பெற மாட்டார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அங்குதான் பிக்பாஸ் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட் கொடுத்தார். இந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் 10 வாரம் மட்டும்தான் செல்லுபடி ஆகும் என்றும் இதனை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்து போட்டியாளர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டார்.
அதேபோல இந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அஜித் தனக்கோ இல்லை தான் விரும்புவோருக்கு அல்லது தான் விரும்பாத வேறு ஒருவருக்கு ஒருமுறை பயன்படுத்தலாம் என்றும் இந்த எவிக்ஷன் பிரீ பாஸ் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றது என்றும் அது யார் கையில் இருக்கிறதோ அப்போது மட்டும் தான் அவர்களுக்கு அது பயன்தரும் ஒருவேளை அந்தபாஸை மற்றவர்கள் யாராவது திருடி விட்டால் அவர்கள் தான் இந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்த முடியும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்