டாஸ்க் செய்யாமல் தூங்கி வழிந்த பாலாவை எழுப்பியதால் என்ன செய்துள்ளார் பாருங்க.

0
1465
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஆறு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 6வது வாரம் நிறைவேறிவிட்டது. இப்படி ஒரு நிலையில் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக கடைக்குட்டி சீரியல் நடிகர் அஸீம் பிக் பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கடந்த வாரம் முழுக்க தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே கொண்டாட்டமாக தான் சென்றுக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் பெரிதாக பிரச்சினைகள் ஏற்படவில்லை அதே போல தீபாவளி சிறப்புச் சலுகையாக கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று கமல் கூறியிருந்தார்.நேற்றைய நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது இதில் போட்டியாளர்கள் 5 குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த டாஸ்கின் இடையில் அடிக்கடி கொடுக்கப்பட்ட சில ஜாலியான டாஸ்க்குகள் மிகவும் ஜாலியாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் டாஸ்க்கை ஜாலியாக செய்து வருகின்றனர். இன்றும் அதே டாஸ்க் தான் தொடர்ந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ;டாஸ்க் செய்யாமல் தூங்கும் பாலாவை பலரும் எழுப்பி டாஸ்க் செய்ய சொல்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கடந்த வாரம் அந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆஜீத்தை நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ரியோ, பாலா, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா, சுசித்ரா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement