போட்டுக்க ட்ரெஸ் கூட இருக்காது, ஒரு வேல சாப்பாடு தான் இருக்கும் – கடந்து வந்த பாதை டாஸ்க்.

0
699
bb
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். ராஜு ஜெயமோகன் அபிஷேக், அபிநய், வருண், இமான் அண்ணாச்சி அண்ணாச்சி, சிபி, நிரூப் என்று 7 ஆண் போட்டியாளர்களும் இசைவாணி, மதுமிதா ,பிரியங்கா, பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சங், ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ஐகி பெர்ரி, தாமரைச்செல்வி என்று 10 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பிக் பாஸ் சீசன் என்றால் பெண் போட்டியாளர்களை விட ஆண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ஆனால் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக முதல் நாளில் 15 அல்லது 16 போட்டியாளர்களை தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்களை களமிறக்கிவிட்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் இசைவானி தன் சோக கதையை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement