இந்த வாரம் நாமினேட் ஆன 7 நபர்கள் – ப்ரோமோவிலேயே காண்பித்த பிக் பாஸ்.

0
1978
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு செய்து தற்போது 50வது எபிசோடை நெருங்கியுள்ளது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் போட்டியாளராக வந்த சுசித்ரா, பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

- Advertisement -

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருக்கிறது. இந்தவார நோமினேஷன் இன் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆகியுள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து 50 நாட்கள் ஆன நிலையில் இன்னும் 14 போட்டியாளர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். எனவே, வரும் வாரங்களில் டபுள் ஏவிக்ஷன் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதனிடைய மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்த அஸீம் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் மூன்றாவது போட்டியாளராக வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக கொண்டு வர பேச்சு வார்த்தை சென்று கொண்டு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

-விளம்பரம்-
Advertisement