வேற்க விறுவிறுத்து கஷ்டப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி – விட்டுக்கொடுத்து மன்னிப்பு கேட்ட கேப்ரில்லா.

0
1221
suresh
- Advertisement -

நாட்கள் செல்லச் செல்ல பிக்பாஸில் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து கொண்டு வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது..

-விளம்பரம்-

இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சுவாரசியம் குறைவாக இருக்கும் இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். இதில் சிவாணி மற்றும் ரமேஷ் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிக் பாஸ் சிறையில் பூட்டி வைக்குமாறு பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இந்த சீசனில் பிக் பாஸ் சிறக்கு சென்ற முதல் இரண்டு போட்டியாளர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்கள் சிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ரோபோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுள் , யார் ? யாருக்கு ஆதரவு தெரிகிறீர்கள் என்று பிக் பாஸ் கேட்டிருக்கிறார். இதில் ஆதரவு தெரிவிக்கும் நபர் அந்த நபரை முதுகில் தூக்கிக் கொண்டு இருக்க வேண்டும். இதில் கேபியை தூக்கிக்கொண்டு இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் கஷ்டப் படுவதை பார்த்து கேபி இறங்கி விடுகிறார். பின்னர் தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டித்தழுவி அழுகிறார் கேபி.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஏவிக்ஷனில் இடம்பெற்றுள்ள சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அஜீத்திற்கு eviction free pass கிடைத்துள்ளது. இதுவரை பல்வேறு வலைதளத்தில் நடத்தப்பட்டுள்ள ஓட்டிங்கில் ரேகா மற்றும் சனம் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement