அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா ? அர்ச்சனாவை கலாய்த்த கமல்.

0
1022
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா என்று நான்கு போட்டியாளர்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசன் கிட்டத்தட்ட பாதி சீசனையே முடிந்த நிலையில் இதுவரை ஒரு குறும்படம் கூட போடப்படவில்லை என்பது ரசிகர்களின் ஏமாற்றமாக இருந்து வருகிறது.இந்த வாரம் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் ஓடியது. பாலாஜி காலை நீட்டி பேசியது, சம்யுக்தா, வளர்ப்பு குறித்து பேசியது மற்றும் தாய்மை குறித்து பேசியது. ரியோ,சனம் ஷெட்டியை அசிங்கமாக கேட்டு விடுவேன் என்று சொன்னது. சுவாரசியம் கம்மி என்பதை எதன் அடிப்படையில் போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம் போன்ற பல விஷயங்களை கமல் இந்த வாரம் கேட்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி,சம்யுக்தா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள். இந்த வாரம் முழுவதும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் நிஷா, சம்யுக்தா, சனம் ஆகிய மூவருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வந்தது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியான இரண்டாம் ப்ரோமோவில், பாலாஜி மற்றும் ஆரியின் பஞ்சாயத்தை பற்றி பேசிஇருந்தார் கமல். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அர்ச்சனாவின் அன்பு பஞ்சாயத்தை பற்றி பேசிய கமல், அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா என்று அர்ச்சனா சொன்னது போலவே சொல்லி காண்பித்து அர்ச்சனாவை கலாய்த்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement